குட்நியூஸ்!மீண்டும் 9 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

Good news! Daily daily corona exposure below 9,000!

இந்தியா:கடந்த 24 மணி நேரத்தில் 8,488 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை249ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,18,901 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 8,488 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட  2000 குறைவு.மேலும்,538 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,45,18,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 249 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,65,911 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,510  பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை   3,39,34,547 ஆக உயர்ந்துள்ளது.குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.31% ஆக அதிகரிப்பு.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,18,443 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.534 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை1,16,87,28,385பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 32,99,337 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.