குட்நியூஸ்…நீண்ட நாட்களுக்கு பிறகு 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

Good News... Less than 10 thousand daily corona exposure after long days!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,865 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை197ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,56,401 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 8,865 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 1400 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,44,56,401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 197 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,63,852 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,971 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  3,38,61,756 ஆக உயர்ந்துள்ளது.குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.26% ஆக அதிகரிப்பு.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,30,793 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.525 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,12,97,84,045 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 59,75,469 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.