ஜார்கண்டில் புதுமை செய்யும் பள்ளி ஆசிரியர்… கொரோனா காலத்திலும் போதித்து அசத்தும் அந்த ஆசிரியர்…

Default Image

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் பழங்குடி மாணவர்களுக்கு கல்வி பயில ஆசிரியர் எடுத்த புதுமையான முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் உயர்நிலை பள்ளி ஆசிரியராக இருப்பவர் சபன் பத்ரலெக். இவர் மாணவர்களுக்கு கல்வி பயில, புதுமையான யோசனையை செயல்படுத்தியுள்ளார். அந்த கிராமத்தில் உள்ளவர்களின் ஆதரவுடன், வீட்டு திண்ணையின் களிமண் சுவரை கரும்பலகையாக மாற்றியுள்ளார். இதன் மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக வகுப்புகளை நடத்தி வருகிறார். தும்கா மாவட்ட தலைமையகத்தில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள டுமார்த்தர் கிராமத்தில் நடுநிலை பள்ளி உள்ளது. ங்கு சுமார் 290 மாணவர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாணவரும் சமூக தொலைதூர விதிமுறைகளை மனதில் வைத்து ஒரு தனி கரும்பலகையைப் பெறுகிறார்கள்.

பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள் உள்ளனர். மேலும் அனைவரும் சுழற்சி முறையில் வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள். பள்ளி வகுப்புகளை நடத்துவதற்கான புதுமையான வழி இப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தற்போது பலரின் வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் கூறுகையில், கோவிட் -19 காரணமாக பள்ளி நீண்ட காலமாக மூடப் பட்டிருக்கிறது. ஊரடங்கு தொடர்ந்தால் மாணவர்கள் தங்கள் பாடங்களை மறந்து விடலாம். இந்த கிராமம் தொலைதூர பகுதியில் உள்ளது, அங்கு இணையம் மற்றும் மொபைல் சேவைகள் வசதி இல்லை.

எனவே, மாணவர்களின் நலனுக்காக, அவர்களுக்கான வகுப்புகளைஅவர்களது சொந்த வீடுகளில் ஒரு குழுவில் நடத்த முடிவு செய்தோம். பழங்குடி குழந்தைகள் சுவர் ஓவியத்தை எளிதில் கற்றுக்கொள்வதால், அவர்களின் வீடுகளின் சுவர்களை கரும்பலகையாகப் பயன்படுத்தி கற்பிக்க முடிவு செய்தோம். இந்த வழியில், மாணவர்களை ஈர்ப்பதில் நாங்கள் வெற்றி பெற்றோம். இவ்வாறு கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai