ஹரியானாவின் உள்துறை அமைச்சர் அனில் விஜ் மருத்துவமனையில் அனுமதி...!

Haryana Home Minister Anil Vij has been admitted to hospital due to low oxygen levels.

ஹரியானாவின் உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆக்சிஜன் அளவு குறைந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அதிக அளவிலான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனா தொற்று காரணமாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உயிரிழந்த நிலையில், பலர் இந்த கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளாகி குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் ஹரியானாவின் உள்துறை அமைச்சர் அணில் விஜ் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதன் பின் குணமடைந்தார். தற்போதும் அனில் விஜ் அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நாளை அவர் பங்கேற்க இருந்த ஜன்தா தர்பார் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.