கனமழையால் டெல்லி சாலைகளில் வெள்ளம்; வாகன ஓட்டிகள் அவதி!

Heavy rains have caused floods on Delhi roads, causing severe damage to motorists.

கனமழை காரணமாக டெல்லி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை கனமழை கொட்டித் தீர்த்து உள்ளது. இதன் காரணமாக மத்திய டெல்லியில் உள்ள பிரகதி மைதான், தெற்கு தில்லியின் தௌலா கான் பகுதிகளில் அதிகளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சாலையில் வெள்ளம் சூழ்ந்து கொண்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை நீரை அகற்றும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.