அசாமில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்...!

As heavy rains continue in Assam, people are suffering due to floods in their homes.

அசாமில் கனமழை பெய்து வரும் நிலையில், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் உள்ள கம்ரூப் எனும் கிராமத்தில் உள்ள குடிசைகளுக்குள் மழை நீர் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் தங்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கனமழை காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பே அவர்களது வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததாகவும், இதனால் தங்கள் குழந்தைகள் படிக்க முடியாமல் சிரமமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், இப்பகுதியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்து வருவதாகவும் இதுவரை தங்களுக்கு உதவ யாருமே முன் வரவில்லை எனவும் கூறியுள்ளனர்.

unknown node