ஹரியானாவில் கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் வாகனங்கள்…!

ஹரியானாவில் பெய்த கனமழை வெள்ளத்தால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது.
வட இந்திய பகுதிகளிலும் தற்பொழுது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், குறிப்பாக டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அது போல ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதால், அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனையடுத்து இந்த கனமழை வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சாலைகளில் தேங்கி உள்ள வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கும் குருகிராம் பகுதியில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.