குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த இந்தி நடிகை பாயல் ரோகத்கி சமீபத்தில் ஜவஹர்லால் நேரு குடும்பத்தை பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் பண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் பாயல் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் நேற்று ராஜஸ்தானின் பண்டியில் உள்ள கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார். ஆனால் அவரது மனுவை நீதிபதி நிராகரித்தார்.மேலும் வருகின்ற 24-ம் தேதி வரை பாயலை நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். இதை தொடர்ந்து பாயல் ரோகத்கி சிறையில் அடைக்கப்பட்டார்.
நடிகை பாயல் ரோகத்கி வழக்கறிஞர் பூபேந்திர சகாய் சக்சேனா ஜாமீன் கேட்டு உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறினார்.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…