#Breaking:ஜாலிதான்...ஜன.31 வரை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை – புதுச்சேரி அரசு முக்கிய அறிவிப்பு !

Holidays for schools and colleges in Pondicherry till Jan. 31

புதுச்சேரி:ஜன.31 வரை அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவதாக புதுச்சேரி அரசு அறிவிப்பு!

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தமிழகத்தை தொடர்ந்து, அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கு ஜன.31 வரை விடுமுறை வழங்குவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக,1-9 ஆம் வகுப்புகள் வரை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 10,11,12 ஆம் வகுப்புகளுக்கும் மற்றும் கல்லூரிகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை வழங்குவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.