வீடு தேடி வரும் ஏடிஎம் ! சேவையை தொடங்கிய எஸ்பிஐ வங்கி

கொரோனா காரணமாக வாடிக்கையாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலையில் மொபைல் ஏடிஎம் சேவையை தொடங்கியுள்ளது எஸ்பிஐ வங்கி.

கொரோனா காரணமாக வாடிக்கையாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலையில் மொபைல் ஏடிஎம் சேவையை தொடங்கியுள்ளது எஸ்பிஐ வங்கி.

இந்தியாவில் தற்போது 39,980 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,301 பேர் உயிரிழந்துள்ளனர்.10633பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரோனா காரணமாக முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ,பின் மே-3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.தற்போது மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர்.இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் அவதிப்பட்டனர்.எனவே அரசு  சார்பில் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வீடுகளுக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த ஏற்பாடு மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.

தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தான் இந்தியாவின் முதன்மை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் வகையில் புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.அதாவது ,குஜராத், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் ஆகிய மாநிலங்களில் வாடிக்கையாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலையில் மொபைல் ஏடிஎம் சேவையை தொடங்கியுள்ளது எஸ்பிஐ வங்கி.நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருதியே ,அவர்களின் வீடு தேடி ஏடிஎம்கள் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

unknown node