கோர விபத்து...நின்று கொண்டிருந்த பேருந்துகள் மீது லாரி மோதியது..! 8 பேர் பலி, 50 பேர் படுகாயம்..!

மத்தியப் பிரதேசத்தில் நின்றுகொண்டிருந்த 3 பேருந்துகள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் நின்றுகொண்டிருந்த 3 பேருந்துகள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தியில் நின்றுகொண்டிருந்த மூன்று பேருந்துகள் மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். சித்தியில் உள்ள மொஹானியா சுரங்கப்பாதைக்கு அருகில் மூன்று பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த பேருந்துகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேரணியில் கலந்து கொண்டு திரும்பும் மக்கள் பயணித்துள்ளனர்.

அப்பொழுது நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளுக்கு பின்னால் ஒரு லாரி வந்துக்கொண்டிருந்த வந்து கொண்டிருந்தது. திடீரென லாரியின் டயர் வெடித்ததால் கட்டுப்படுத்த முடியாமல் பேருந்துகள் மீது மோதியது. இந்த மோதலில் பேருந்தில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு 50 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சித்தியில் நடந்த சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்கத்தை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். காயமடைந்தவர்களுக்கு நிர்வாகம் சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

unknown node