PSBB இன் பழையமாணவராக மட்டுமல்லாமல் 2 பெண் குழந்தைகளின் தந்தையாகவும் வேதனைப்படுகிறேன் – ரவிச்சந்திரன் அஸ்வின்

I am suffering not only as an alumnus of PSBB but also as a father of 2 girls - Ravichandran Aswin

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணையில் பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவர ராஜகோபாலை காவல்துறை கைது செய்தனர்.ஜூன் 8-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில்,இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்,நான் இரண்டு இரவுகளாக குழப்பத்தில் உள்ளேன்.நான் பத்ம சேஷாத்ரி பள்ளியின் பழைய மாணவராக மட்டுமல்லாமல், 2 பெண் குழந்தைகளின் தந்தையாகவும் வேதனைப்படுகிறேன்.

ராஜகோபாலன் என்பது இன்று வெளிவந்த ஒரு பெயர், ஆனால் எதிர்காலத்தில் நம்மைச் சுற்றியுள்ள இத்தகைய சம்பவங்களை நிறுத்த வேண்டும்.நாம் செயல்பட வேண்டும் மற்றும் ஒரு முழுமையான மாற்றம் தேவை,கல்வி முக்கியம் தான் ஆனால் எல்லாம் இல்லை என்று தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

unknown node

,