தான் இனி அரசியல் ஆலோசகராக இருக்கப்போவதில்லை என்றும், தனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புவதாக பிரசாந்த் கிஷோர் தனியார் ஊடகத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக வவியூக வகுப்பாள்ர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான IPAC என்ற தேர்தல் வியூகங்கள் நிறுவனம் வகுத்துக் கொடுத்தது. மேலும், தமிழகத்தில் திமுக கட்சிக்கும் அந்நிறுவனம் வகுத்துக் கொடுத்தது.
இந்தநிலையில், நான் இனி அரசியல் ஆலோசகராக இருக்கப்போவதில்லை. ஐபேக் நிறுவனத்தை என் ஊழியர்கள் நடத்துவார்கள். நான் என் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புகிறேன் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரசாந்த் கிஷோர் கூறினார். மேலும், நாங்கள் எதிர்பார்த்த அளவை விட அதிக சீட்டுகளை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக காட்சிகள் வெற்றி பெறும் சூழலில் உள்ளது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர், கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றுவிட்டால், நான் ட்விட்டரிலிருந்து விலகிவிடுகிறேன்’ தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…