முக்கிய செய்தி : போலியோ சொட்டு மருந்து முகாம் நிறுத்தி வைப்பு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

The nationwide polio vaccination camp, which was scheduled to begin on January 17, is on hold until further notice.

நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் தேதி தொடங்க இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.மேலும், 5 வயதிற்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து போடப்படும் என்றும் கூறினார்.ஆனால் இதன் பின் நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 முதல் தொடங்க உள்ளதால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மறுஅறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.