கொரோனா தடுப்பூசி – இன்று நாடு முழுவதும் ஒத்திகை

In a massive country-wide exercise, another Mock Drill on corona Vaccine administration to be conducted today

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்த ஒத்திகை இன்று நடைபெற உள்ளது.

ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்து ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்டது.அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று  மற்றொரு ஒத்திகை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி விநியோகிக்கும் திறன் மற்றும் மேலாண்மையை உறுதி செய்வதற்காக இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒத்திகை போல், பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஊரக அல்லது நகர்ப்புற இடங்கள் என மூன்றுவிதமான இடங்கள் அடையாளம் காணப்படும். இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஹர்ஷ் வர்தன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தி ஒத்திகை தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.