இந்தியாவில் மீண்டும் 40 ஆயிரத்திக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு..!

In India, 36,083 people have been newly infected with corona in the last 24 hours.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,083 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 493 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,21,92,576 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 36,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 4000 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,21,92,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 493 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,31,225 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 37,927 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,13,76,015 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,85,336 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 54,38,46,290 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்,73,50,553 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.