இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது..!

இந்தியாவில் கடந்த 2 நாட்களாக 3 ஆயிரத்திற்கும் மேல் பதிவான கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது. நேற்று ஒருநாளில் 3,095 பேருக்கு கொரோனா பாதிப்புக் கண்டறியப்பட்ட

இந்தியாவில் கடந்த 2 நாட்களாக 3 ஆயிரத்திற்கும் மேல் பதிவான கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது. நேற்று ஒருநாளில் 3,095 பேருக்கு கொரோனா பாதிப்புக் கண்டறியப்பட்ட நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,995 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16,354 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,876 ஆக உள்ளது.

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,71,551 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 220,66,09,015 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 9,981 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.