நாய்க்கும் ஊரடங்கா….? நடைபயணம் சென்ற தொழிலதிபர் மற்றும் நாயை கைது செய்த போலீசார்…!

இந்தூரில், நடைபயணம் சென்ற தொழிலதிபர் மற்றும் நாயை கைது செய்த போலீசார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதை அடுத்து, மத்திய, மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில், இந்தூரில் பாலாசியா பகுதியில், தொழில் அதிபர் ஒருவர் தனது நாயை அழைத்துக்கொண்டு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவ்வூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தொழிலதிபரை கைது செய்த போலீசார் அவர் அவரது நாயையும் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த நபர் நாயுடன் சிறைக்கு அனுப்பப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், போலீசார் இதனை மறுத்துள்ளனர். சில விலங்கு உரிமை ஆர்வலர்கள் வெளியில் சென்றதற்காக மனிதனையும், நாயையும் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025