மேகாலயாவில் என்பிபி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை!

மேகாலயாவில் ஆளுங்கட்சியான என்பிபி தனிப் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை.

மேகாலயாவில் ஆளுங்கட்சியான என்பிபி தனிப் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை.

ஆளுங்கட்சி முன்னிலை:

திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மேகாலயாவில் ஆளுங்கட்சியான என்பிபி தனிப் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

பாஜக பின்னடைவு:

அதன்படி, மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 31, பாஜக 8, காங்கிரஸ் 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பிற கட்சிகள் 15 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தலா 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா மற்றும் நாகாலாந்தில் தலா 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

போட்டியின்றி தேர்வு:

மேகாலயாவின் சோகியோங் தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா கட்சி வேட்பாளர் இறந்ததால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதுபோன்று நாகாலாந்தில் அலுகுடோ தொகுதியில் வேறு யாரும் போட்டியிடாததால் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திரிபுரா, நாகாலாந்து நிலவரம்

நாகாலாந்தில் பாஜக, என்டிபிபி கூட்டணி 37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. நாகாலாந்து மக்கள் முன்னணி 8, காங்கிரஸ் 2, பிற கட்சிகள் 13 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். இதுபோன்று திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 36 இடங்களில் பாஜக அணி முன்னிலை பெற்றுள்ளது.

திமோக 9, இடதுசாரி – காங்கிரஸ் கூட்டணி 15 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. மேலும், திரிபுராவில் புதிதாக உருவான திப்ரா மோர்ச்ச கட்சி 9 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. எனவே, மேகாலயவை தவிர, மற்ற திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.