#Breaking:இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!4,194 பேர் உயிரிழப்பு..!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,57,299 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,194 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில்,கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்,2,57,299 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,4,194 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து,தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,62,89,290 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,95,525 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,கடந்த ஒரே நாளில் 3,57,630 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.எனவே,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,30,70,365 ஆகும்.மேலும்,31,29,878 பேர் கொரோனா தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து,இந்தியாவில் இதுவரை 19,33,72,819 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.