உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,129 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 43,415 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4,688 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,530 பேர் ஆக உள்ளது. நேற்று ஒரேநாளில் 20 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,00,298 ஆக பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை2,17,68,35,714டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 11,67,772 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.