உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

In the last 24 hours alone, 1,317 new cases of corona have been reported in Uttar Pradesh, killing 179 people.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,317 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 179 பேர் உயிரிழந்துள்ளனர்.

முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிர அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தற்போதும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனாவால் 179 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது அம்மாநிலத்தில் 32,165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார். இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உத்தரபிரதேசத்தில்கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 5675 ஆக அதிகரித்துள்ளது.