இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,742 பேர் கொரோனாவால் பாதிப்பு...ஒரே நாளில் 39,972 பேர் குணமடைவு..!

In the last 24 hours in India, 39,742 people were affected by corona ... 39,972 people recovered in one day ..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,742 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 535 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,13,71,901 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 39,742 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 600 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,13,71,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 535 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,20,551  பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 39,972 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,05,43,138 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,08,212 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 43,31,50,864 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.