இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் கொரோனாவால் பாதிப்பு....1,206 பேர் பலி...!

In the last 24 hours in India, 42,766 people have been affected by corona .... 1,206 people have died ...!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,206 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  3,07,95,716 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட  ஆயிரம் குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,07,95,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,206 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,07,145 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 45,254 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,99,33,538 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,55,033 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 37,21,96,268 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக,கடந்த 24மணி நேரத்தில் 30,55,802 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.