கடந்த 14 நாட்களில் இத்தனை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை.!

12 மாநிலங்களின் 22 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால்

12 மாநிலங்களின் 22 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

இதனிடையே மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், புதுச்சேரியின் மாஹே, கர்நாடக மாநிலம் குடகு மாவடங்களில் கடந்த 28 நாட்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. 12 மாநிலங்களின் 22 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை . 23 மாநிலங்களின் 47 மாவட்டங்களில் கொரோனா வைரஸ்  குறைந்து உளள்து .அங்கு ஆரோக்கியமான சூழல்  நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.