மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 5,314 பேர் பாதிப்பு!

Default Image

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5,134 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,17,121 ஆக உயர்வு.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் அங்கு இன்று ஒரே நாளில் 5,314 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,17,121 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 224 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,250 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,296 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,18,558 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 89,294 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்