அதிகரிக்கும் கொரோனா தொற்று...! 28 ரயில்கள் ரத்து...! – இந்தியன் ரயில்வே

Indian Railways has canceled 28 trains, including Duronto-Rajdhani-Sadhapati and Vande Bharat.

இந்திய ரயில்வே, துரோன்டோ-ராஜதானி-சதாப்தி மற்றும் வந்தே பாரத் உள்ளிட்ட 28 ரயில்களை ரத்து செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸால்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது.

அந்த வகையில் இந்திய ரயில்வே, துரோன்டோ-ராஜதானி-சதாப்தி மற்றும் வந்தே பாரத் உள்ளிட்ட 28 ரயில்களை ரத்து செய்துள்ளது. மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை இந்த சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக வடக்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

unknown node