இந்தியாவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகத்தை 512 Kbps-லிருந்து 2 Mbps ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிராட்பேண்ட் இணைப்புக்கான குறைந்தபட்ச பதிவிறக்க வேகத்தை 512 Kbps-லிருந்து 2 Mbps ஆக மாற்றியமைக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மத்திய அரசிடம் பரிந்துரைத்தது. இதனையடுத்து தற்பொழுது பிராட்பேண்ட் இணைப்பின் குறைந்தபட்ச பதிவிறக்கம் வேகத்தை 2 Mbps ஆக மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.
unknown nodeஇது குறித்து பிஐஎப்-ன் தலைவர் (Broadband India Forum) டி.வி.ராமச்சந்திரன் கூறுகையில், இந்த குறைந்தபட்ச இணைய வேக திருத்தம் கிராமப்புறங்களில் மற்றும் நகர்புறங்களில் உள்ள பிராட்பேண்ட் பயணங்களுக்கு பயனளிக்கும் என கூறினார். ஒட்டு மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும் பொழுது பிராட்பேண்ட் சேவைக்கு அதிகம் முன்னேற்றம் தேவைப்பட்டாலும் இந்த மாற்றம் சரியான வழியில் செல்வதற்கான முதல் படி என்று அவர் மேலும் கூறினார்.
unknown nodeகடந்த நவம்பர் மாத தரவுகளின் படி, இந்தியாவில் உள்ள 825.4 மில்லியன் (82.5 கோடி) பிராட்பேண்ட் சந்தாதாரர்களில் 793.5 மில்லியன் (79.3 கோடி) சந்தாதாரர்கள் வயர்லெஸ் பயனாளர்களாகவும் மீதமுள்ளவர்கள் வயர்லைன் பயனாளர்களாகவும் உள்ளனர். இந்தியாவில் மிகப் பெரிய சேவை வழங்குனர்களின் பட்டியலில், ரிலையன்ஸ் ஜியோ 430.18 மில்லியன் (43 கோடி) பிராட்பேண்ட் சந்தாதாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
unknown nodeபாரதி ஏர்டெல் 230.56 மில்லியன் (23 கோடி) சந்தாதாரர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. வோடபோன் ஐடியா 123.48 மில்லியன் (12.3 கோடி) சந்தாதாரர்களை பெற்றுள்ளது பிஎஸ்என்எல் 25.85 (2.5 கோடி) மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. சேவை வழங்குனர்களின் பட்டியலில் 98.4% சந்தைப் பங்கின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளது.