இந்தியா கூட்டணி… மும்பையில் 3 நாள் ஆலோசனை கூட்டதிற்கான தேதி அறிவிப்பு.!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பலமான கூட்டணியை உருவாக்க காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 26 பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா எனும் கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
ஏற்கனவே, இந்த கூட்டணியின் முதற்கூட்டம் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் பாட்னாவில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது கூட்டம் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பெயரில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மாதம் ஜூலை 17, 18 ஆகிய தேதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தான் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மூன்றாவது ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதற்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது அதில் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 1ஆம் தேதி வரையில் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் (தலைவர்) யார் என கலந்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அநேகமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணிக்கு தலைமை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.