செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ்  கடந்த 2019இல் உலக செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று சாதனை படைத்தது இருந்தார். தனது 16வது வயதில் உலக செஸ் சாம்பியனை

Tamilnadu CM MK Stalin - Grandmaster Gukesh

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ்  கடந்த 2019இல் உலக செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று சாதனை படைத்தது இருந்தார். தனது 16வது வயதில் உலக செஸ் சாம்பியனை வீழ்த்தி சாதனை படைத்து இருந்தார்.

இவர் தற்போது உலக டெஸ்ட் செஸ் சாம்பியன் தர வரிசையில் 2755 புள்ளிகளுடன் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார். 1986ஆம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தை முந்திய முதல் செஸ் வீரர் குகேஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் 2754 புள்ளிகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளார்.

உலக செஸ் வீரர்கள் தரவரிசையில் இளம் வயதில் டாப் 10 இடத்திற்கு முன்னேறிய குகேஷிற்கு தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உங்கள் அசாத்திய சாதனையில். உங்களது உறுதியும் திறமையும் உங்களை செஸ் விளையாட்டின் உயர்மட்ட நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. உங்கள் சாதனை இளம் திறமையாளர்களுக்கு ஒரு உத்வேகமாகவும், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தருணமாகவும் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

unknown node