இந்தியா -பாகிஸ்தான் பேச்சு வார்த்தையா..?அதலாம் ஒன்னும் கிடையாது..!விளக்கிய வெளியுறவுத்துறை

பாகிஸ்தான் உடன் இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என்ற பாகிஸ்தான் ஊடகங்களில்  பரப்படும் செய்திகள் உண்மையல்ல என்று  வெளியுறவுத்துறை செய்தி

பாகிஸ்தான் உடன் இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என்ற பாகிஸ்தான் ஊடகங்களில்  பரப்படும் செய்திகள் உண்மையல்ல என்று  வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து  வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஆக உள்ள ரவிஷ்குமார் கூறும் போது  பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்றதற்கு பாகிஸ்தான் தரப்பில் வாழ்த்து கடிதம் அனுப்பியது.அந்த வாழ்த்து கடிதத்திற்கு மரபின் அடிப்படையில் இந்தியா பதில் கடிதம் அனுப்பியதுமேலும் கடிதத்தில் கிழக்கு ஆசியாவில் அனைத்து நாடுகளுடனும் நல்ல உறவைத் தொடர விரும்புகிறோம் , தீவிரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழல் மிக  அவசியம் என்று சுட்டிக்காட்டி உள்ளோம் என்று குறிப்பிட்டார்.கடிதத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மட்டுமே தெரிவித்துஉள்ளோம் ஊடகம் சொல்வது போன்ற பேச்சுவார்த்தை தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.