உலக வங்கி தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா தேர்வு!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை பூர்விகமாக கொண்ட அஜய் பங்கா 5 ஆண்டு உலக வங்கி தலைவர் பதவி வகிப்பார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை பூர்விகமாக கொண்ட அஜய் பங்கா 5 ஆண்டு உலக வங்கி தலைவர் பதவி வகிப்பார்.

உலக வங்கி தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த 63 வயதான அஜய் பங்கா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வேறு எந்த நாடும் உலக வங்கி தலைவர் பதவிக்கு யாரையும் நிறுத்தாததால் அஜய் பங்கா போட்டியின்றி தேர்வானார்.

அதன்படி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை பூர்விகமாக கொண்ட அஜய் பங்கா 5 ஆண்டு உலக வங்கி தலைவர் பதிவில் இருப்பார். இந்திய-அமெரிக்க வணிகத் தலைவரான அஜய் பங்கா, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பின்னர், உலக வங்கியின் அடுத்த தலைவராக பதவியேற்கத் தயாராகிவிட்டார்.

பிப்ரவரியில், அமெரிக்க தினர் ஜோ பிடன், உலக வங்கியை வழிநடத்த அஜய் பங்காவை பரிந்துரைப்பதாக அறிவித்தார். முன்னாள் Mastercard Inc. தலைவர் பங்கா தற்போது ஜெனரல் அட்லாண்டிக்கில் துணைத் தலைவராக பணியாற்றுகிறார். இந்த நிலையில், அதிபர் பரிந்துரையை தொடர்ந்து, உலக வங்கி தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.