இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு.!

இந்தியாவில் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் , உயிரிழந்தோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.கொரோனா வைரஸ் பரவலை

இந்தியாவில் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் , உயிரிழந்தோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2547 ஆக இருந்த நிலையில் இன்று காலை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்துள்ளது.உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 லிருந்து 68 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 184 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா  423, தமிழ்நாடு 411, டெல்லி 386, கேரளா 295 ஆகிய  மாநிலங்கள் உள்ளது.