இந்தியாவின் விவசாயிகள் இனி பின்தங்கிய நிலையில் வாழ முடியாது – பிரதமர் மோடி பேச்சு

India's farmers can no longer live in backwardness-PM Narendra Modi addresses farmers at the 'KisanKalyan' event

பெரிய நாடுகளின் விவசாயிகளுக்கு கிடைக்கும் நவீன வசதிகள் இந்திய விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும், இதை இனி தாமதப்படுத்த முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் நலத்திட்ட மாநாட்டில் பிரதமர்  நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றி வருகிறார்.அப்பொழுது அவர் பேசுகையில்,விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் கொண்டுவந்த சீர்திருத்தங்களை பார்த்து எதிர்க்கட்சிகள் கவலை அடைந்து விட்டன. யாரெல்லாம் விவசாயிகளை புறம் தள்ளினார்களோ அவர்கள் தான் தற்பொழுது இந்த மோசமான அரசியலை செய்து வருகின்றனர்.விவசாயிகளின் தற்கொலைகளை இந்த புதிய வேளாண் சட்டங்கள் தடுக்கும்.

நாங்கள் விவசாயிகளுக்கு உதவி வருகிறோம். எங்களைப் போலவே விவசாயிகளுக்கு உதவி செய்ய எதிர்க்கட்சிகளை எது தடுக்கிறது என  கேள்வி எழுப்பியுள்ளார்.எதிர்க்கட்சிகளால் வாக்குறுதிகளை மட்டுமே தர முடியும். ஆனால் ஆளும்கட்சி மட்டும்தான் அதை நிறைவேற்றும். இந்தியாவின் விவசாயிகள் இனி பின்தங்கிய நிலையில் வாழ முடியாது. பெரிய நாடுகளின் விவசாயிகளுக்கு கிடைக்கும் நவீன வசதிகள் இந்திய விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும், இதை இனி தாமதப்படுத்த முடியாது என்று பேசியுள்ளார்.