Categories: இந்தியா

இந்த 9 துறைகள் எங்களுக்கு தான்… பாஜக உறுதி.? JDU, TDP கட்சிகளுக்கு…

Published by
மணிகண்டன்

டெல்லி: உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை போன்ற முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக்கொள்ள பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. பிரதமர் மோடி நாளை மாலை 7 மணி அளவில் இந்தியவின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், நாளை முக்கிய துறைகளுக்கான அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

இப்படியான சூழலில், NDA கூட்டணியில் முக்கிய கட்சிகளாக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகியவை முக்கிய துறைகளை கேட்பதாகவும் அவ்வப்போது உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனை தொடர்ந்து தபோது தனியார் செய்தி நிறுவனத்தில் வெளியான தகவலின்படி,  NDA கூட்டணியில் தலைமை வகிக்கும் பாஜக, உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை, ரயில்வேத் துறை, சாலைப் போக்குவரத்து, சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, கல்வித்துறை ஆகிய 9 துறைகளை தன்வசப்படுத்த வாய்ப்புள்ளது என்றும்,

கூட்டணி கட்சிகள் அமைச்சர்களாக, துணை அமைச்சர்களாக கிட்டத்தட்ட 12 முதல் 15 பதவிகளை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. பீகார் பாஜக மற்றும் நிதிஷ்குமாரின் JDU கட்சிகளுக்கு சம எண்ணிக்கையில் அமைச்சரவை பொறுப்புகள் கிடைக்கும் என்றும், சந்திரபாபு நாயுடுவின் TDP கட்சிக்கு 3 அமைச்சரவை பொறுப்புகள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

புதியதாக அமையவுள்ள 18வது அமைச்சரவையில் யார் யார் எந்த இடம்பெற்றுள்ளனர், எந்த கட்சிகளுக்கு எந்தெந்த துறைகள் என்ற விவரம் நாளை மாலை அதிகாரபூர்வமாக கிடைக்கப்பெறும் என்று அறியப்படுகிறது.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

தனது ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய அஜித் குமார்.! வைரலாகும் வீடியோ..,

இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…

12 minutes ago

CSK vs RR: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்.., 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

2 hours ago

ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு.., 100 பேர் சிக்கி தவிப்பு.!

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…

2 hours ago

பாகிஸ்தான் தளபதிக்கு பதவி உயர்வு.! யார் இந்த அசிம் முனீர்.?

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…

3 hours ago

CSK vs RR: வெற்றி பெறுமா சிஎஸ்கே.? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு.!

டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…

4 hours ago

ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! பெங்களூரு போட்டி இடமாற்றம்.! எங்கு தெரியுமா?

பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு…

4 hours ago