CSK vs RR: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்.., 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே.!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்ய வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே முதல் பின்னடைவு ஏற்பட்டது. டெவன் கான்வே 8 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். உர்வில் தனது கணக்கைத் திறக்காமலேயே வெளியேறினார். ஆயுஷ் மத்ரே 20 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அஸ்வின் 8 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார், ஜடேஜா ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. டெவால்ட் பிரெவிஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரெவிஸ் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களை அடித்தார். பவர்பிளேயில் 68 ரன்களைக் குவித்தாலும் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தாலும் சிஎஸ்கே வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.
யுத்விர் சிங் சரக் வீசிய 4-வது ஓவரில் அஸ்வின் 1 பவுண்டரி, 1 சிக்ஸ் விளாச, மற்றொருபுறம் இளம் வீரர் ஆயுஸ் மாத்ரேவும் 1 பவுண்டரி, 1 சிக்ஸ் அடித்து அசத்தினார். இதன்மூலம், அந்த ஓவரில் ஒட்டுமொத்தமாக சென்னை அணி 24 ரன்கள் குவித்தது. 6 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 68 ரன்கள் குவித்தது.
குறிப்பாக, ஆயுஷ் மாத்ரே, பிரேவிஸ், துபே தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வலுசேர்த்தனர். பின்னர், நிதனமாக விளையாடி வந்த சிவம் துபே 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில், தோனியும் 17 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். ராஜஸ்தான் அணி தரப்பில் அதிரடியாக பந்து வீசிய யுத்வீர் சரக் 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் மத்வால் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஒரு வழியாக, சென்னை அணி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு ராஜஸ்தான் அணிக்கு 187 ரன்களை குவித்தது. இப்பொழுது, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி களமிறங்க போகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.