CSK vs RR: வெற்றி பெறுமா சிஎஸ்கே.? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு.!
இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில்,கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ள ராஜஸ்தானும், சென்னையும், ஏற்கெனவே அடுத்த சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியது. இன்று ஆறுதல் வெற்றிக்காக இந்த ஆட்டத்தை விளையாட போகின்றனர். கடைசி போட்டி என்பதால் ராஜஸ்தான் வெற்றியுடன் முடிக்க தீவிரம் காட்டும்.
தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி,சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :
கேப்டன் தோனி தலைமையிலான அணியில், ஆயுஷ் மத்ரே, டெவோன் கான்வே, உர்வில் படேல், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, அன்ஷுல் கம்போஜ், ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி :
கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையிலான அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, குவேனா மபாகா, யுத்வீர் சிங் சரக், துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் மத்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகள் மற்றும் -0.701 ரன் ரேட்டுடன் 9வது இடத்தில் உள்ளது. மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வெற்றிகளையும் 6 புள்ளிகளையும் பெற்றுள்ளது. அவர்கள் -992 நிகர ஓட்ட விகிதத்துடன் 10வது இடத்தில் உள்ளனர்.