ட்விட்டர் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சியின் குற்றச்சாட்டு... அப்பட்டமான பொய்- அனுராக் தாக்கூர்.!

ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுத்ததாக ஜாக் டோர்சியின் குற்றச்சாட்டு பொய் என அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

Dorsey Anurag

ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுத்ததாக ஜாக் டோர்சியின் குற்றச்சாட்டு பொய் என அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சி, இந்திய அரசு தங்கள் இந்திய ட்விட்டர் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், சொன்னதை செய்யாவிட்டால் அலுவலகத்தை மூட நேரிடும் எனவும் கூறியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பிரேக்கிங் பாயின்ட்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, டோர்சி இவ்வாறு தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டத்தின் போது அரசை விமர்சிப்பவர்களின் தொடர்பான ட்விட்டர் கணக்கை பிளாக் செய்ய அழுத்தம் கொடுத்ததாக, டோர்சி கூறியது அப்பட்டமான பொய் என்று மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

ட்விட்டர் ஃபைல்ஸில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, முன்னாள் ட்விட்டர் சிஇஓ டோர்சி இதுவரை பதிலளிக்க முடியவில்லை. ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கி பொறுப்பேற்ற போது, ட்விட்டர் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டது என்பதை ட்விட்டர் ஃபைல்ஸ் மூலம் கொண்டுவந்தார்.

பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாக இந்த குற்றச்சாட்டு வெளியிடப்பட்டது பேசிய மத்திய அமைச்சர், இந்தியாவில் தேர்தல் நெருங்கும் போது இப்படி பல வெளிநாட்டு சக்திகள் விழித்துக்கொள்ளும் என்று கூறியுள்ளார். இந்தியாவில் அமைதியின்மையை உருவாக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்று அனுராக் தாக்கூர் மேலும் தெரிவித்தார்.