ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது
இந்த தகவல் சர்வதேச அளவில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவராக கடந்த பல வருடங்களாக பயங்கரவாத செயல்களை செய்து வருபவன் மசூத் அசார். இந்திய சிறையில் இருந்து கடந்த 1999ஆம் ஆண்டு காந்தகார் விமான கடத்தல் மூலமாக விடுவிக்கப்பட்டவன் மசூத் அசார். இதன் பின்னர் இந்தியாவின் மீதான பல்வேறு தாக்குதல்களை தலைமை கொண்டு நடத்தியவன் இவன்.
unknown nodeசமீபத்தில் புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவன் இவன் தான். இந்நிலையில் இவனுக்கு கடந்த பல வருடங்களாக புற்றுநோயில் இருந்து வந்ததாகவும் அந்த புற்றுநோய் தாக்கம் அதிகரித்து அதிகரித்து இறந்து விட்டதாகவும் தற்போது சர்வதேச செய்திகள் வந்துள்ளது.