ஜம்மு – காஷ்மீரில் தீ விபத்து..!

ஜம்மு - காஷ்மீரில் மின்னுற்பத்தி மைய வளாகத்தில் பற்றி எரிந்த நெருப்பால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. பாரமுல்லா மாவட்டத்தில் உரி நகரில் தேசிய

ஜம்மு – காஷ்மீரில் மின்னுற்பத்தி மைய வளாகத்தில் பற்றி எரிந்த நெருப்பால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. பாரமுல்லா மாவட்டத்தில் உரி நகரில் தேசிய நீர்மின் கழக வளாகத்தில் ஒரு பகுதியில் இன்று திடீரென தீப்பற்றியது.

இதில் டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட சாதனங்களில் நெருப்பு கொளுந்து விட்டு எரிந்தது. ஏராளமான மின் சாதனங்கள் பற்றி எரிந்ததால், அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவியது.

தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறை தீயை கட்டுப்படுத்த முனைந்தனர்.

நெருப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தீயை முழுமையாக அணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை