ஜன்அதிகார் கட்சி (ஜேஏபி) தலைவர் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதில் 11 பேர் காயமடைந்தனர்.
பீகாரின் தலைவரும் ஜன்அதிகார் கட்சியின் (ஜேஏபி) தலைவருமான பப்பு யாதவ், சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதில் 11 பேர் காயமடைந்தனர். ஜன்அதிகார் கட்சி தலைவர் முபாரக்பூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து சரண் மாவட்டத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார்.
unknown nodeஅப்பொழுது அர்ராவிலிருந்து பாக்சர் செல்லும் நெடுஞ்சாலையில் பப்பு யாதவ்வின் வாகன தொடரணியில், அதிகமான பாரங்கள் ஏற்றப்பட்ட டிரக் தொடரணியை முந்தி சொல்ல முயன்ற போது வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்சியின் தலைவர் சுனில் குமார் மற்றும் வாகன ஓட்டுனர் சுதீர் குமார் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.
unknown nodeஇந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பப்பு யாதவ், “நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்” என்று கூறினார்