சோனியா காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் என காங்கிரஸ் தலைவர்கள் உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 12-ஆம் தேதி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி, கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னரே சோனியா காந்தியின் உடல்நலம் சீராக இருப்பதாகவும், வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனியா காந்தி உடல்நிலை குறித்து அக்கட்சி செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சோனியா காந்திக்கு சுவாச குழாயில் ஏற்பட்ட பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சோனியா காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A statement on Congress President’s health condition. pic.twitter.com/4tVBtgyhEi
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 17, 2022