கர்நாடகா சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

கர்நாடகா  சட்டப்பேரவை தேர்தல், வயநாடு இடைத்தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.

கர்நாடகா  சட்டப்பேரவை தேர்தல், வயநாடு இடைத்தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று காலை 11.30 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவையின் பதவி காலம் மே மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த சமயத்தில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 224 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே 3 முனை போட்டி நிலவி வருகிறது. கர்நாடகா தேர்தலுக்கு 124 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

மேலும், காலி என அறிவிக்கப்பட்ட கேரளா வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியும் இன்று காலை 11.30 மணிக்கு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்துள்ள நிலையில், அதற்கான தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.