வெறும் மூன்று மணி நேரத்தில், கர்நாடக சட்டமன்றத்தில் நில வருவாய் (திருத்த) மசோதா உள்ளிட்ட ஒன்பது மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா கர்நாடக நில சீர்திருத்த (திருத்த) மசோதா 2020 ஐ தாக்கல் செய்தார். மசோதாவைத் தாக்கல் செய்து , அசோகா பேசுகையில் , “இந்த மசோதா ஒரு அரக்கன் அல்ல. உண்மையில், இது மாநிலத்தில் விவசாயத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும். தேவையற்ற முறையில் எதிர்க்கட்சிகள் இந்தத் திருத்தம் தொழிலதிபர்களுக்கு உதவுவதாக கூற முயற்சிக்கின்றனர்.
மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மாநிலத்தில் இருக்கும் மொத்த நிலத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. “இதுபோன்ற நிலையில், எதிர்காலத்தில் அனைத்து நிலங்களையும் தொழில்களால் எவ்வாறு பறிக்க முடியும்?” என்றும் கேள்வி எழுப்பினார்.இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் 79 ஏ மற்றும் 79 பி பிரிவுகளிலிருந்து விடுபடுவதாகும்.இது ஒரு வரத்தை விட மாநில விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு அதிக தடையாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.
பின்னர் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி பேசிய அசோகா, 195 லட்சம் ஹெக்டேர் நிலத்தில், 30 லட்சம் ஹெக்டேர் வன நிலம், 22 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் மற்றும் 11.79 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம் உள்ளது என்று கூறினார். “இந்த திருத்தம் சாகுபடி செய்ய, தரிசு நிலம் மற்றும் தொழிலதிபர்களுக்கு உதவாது” என்று அவர் தெரிவித்தார்.
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…