காஷ்மீர் தாக்குதல்:ஜம்மு-காஷ்மீர் நடந்த 2 பயங்ரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் மாதிரி தோற்ற படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஷிவ் கோரி கேத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு வழிபட சென்ற பக்தர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தூப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததுடன், 41 பேர் காயமடைந்தனர். அதன்பின், செவ்வாய்க்கிழமை அன்று பதேர்வாவின் சட்டர்கல்லாவில் உள்ள 4 ராஷ்ட்ரிய ரைஃபில் மற்றும் போலீஸ் கூட்டுச் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
மேலும், இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையிருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்தது. இந்த பயங்கர தாக்குதலில் ஒரு காவல் அதிகாரி உட்பட 7 பாதுகாப்பு படையினர் பலத்த காயமடைந்தனர். அதனை தொடர்ந்து, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 9 பேர் உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகையாக அறிவித்தார் ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர்.
unknown nodeமேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதியின் மாதிரி வரைபடத்தை வெளியிட்டு, அந்த பயங்கரவாதியை குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தனர். இந்நிலையில் தற்போது நேரில் கண்ட சாட்சிகளை கருத்தில் கொண்டு மாதிரி வரைபடம் வரைந்து 4 பயங்கர வாதிகளின் படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தீவிரவாதிகளின் இருப்பு மற்றும் நடமாட்டம் பற்றிய தகவல் தெரிந்தால் அதனைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
