கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தியதற்காக ‘உலகின் சிறந்த சிந்தனையாளராக’ கேரள சுகாதார அமைச்சரான கே. கே. ஷைலஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் பிரபல பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்று ‘உலகின் சிறந்த சிந்தனையாளர்’ என்று உலகெங்கிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபர்களில் கேரள சுகாதார அமைச்சரான கே. கே. ஷைலஜா முதல் இடம்பெற்றுள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸை திறம்பட கையாண்டு குறைந்த இறப்பு விகிதத்தை பெற்றதற்காக கே. கே ஷைலஜா பாராட்டப்பட்டுள்ளார். சரியான நேரத்தில் சரியாக செயல்பட்ட பெண் என்ற பெருமையை ஷைலஜா பெற்றுள்ளார்.
அடுத்ததாக இந்த பட்டியலில் நியூஸிலாந்து பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் அவர்கள் இரண்டாவது இடத்தையும், பங்களாதேஷ் கட்டிட கலைஞரான மெரினா தபஸும் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் நோபல் பரிசு வென்ற டஃப்லோ, எழுத்தாளரான ஹிலாரி மாண்டேல், சுற்றுச்சூழல் ஆர்வலரான டேவிட் அட்டன்பரோ ஆகியோரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த பிரிட்டிஷ் பத்திரிகை கே. கே. ஷைலஜா அவர்களை குறித்து கூறிய போது, ஆசிரியராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கே. கே. ஷைலஜா அவர்கள் 2018-ஆம் ஆண்டு பரவிய நிபானா வைரஸை சரியாக கையாண்டதை போன்று சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த நாளில் இருந்து அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துல்லியமாக கணித்தும், அதன் தாக்கத்தையும் முழுமையாக புரிந்து கொண்டு பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தினார் என்று கூறியுள்ளது.
இந்த பட்டியலை இறுதி செய்ய 20,000க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகி பொது வாக்கெடுப்பில் எண்ணப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சேவை தினத்தன்று கொரோனா வைரஸை கட்டுப்படுத்த திறம்பட பணியாற்றியதற்காக கே. கே. ஷைலஜாவிற்கு ஐ. நா சபை பாராட்டுகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…