கொச்சி- மங்களூரு இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டம் தொடக்கம்!

The Prime Minister inaugurated the project to build a 450 km natural gas pipeline between Kochi and Mangalore through video.

கொச்சி- மங்களூரு இடையே 450 கி.மீ தூரத்திற்கு இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை காணொளி மூலம் பிரதமர் தொடங்கிவைத்தார்.

கொச்சி-மங்களூரு இடையே குழாய்வழி கேஸ் விநியோகத்தை பிரதமர் மோடி டெல்லியிலிருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 450 கி.மீ தூரமுள்ள இந்த குழாயை கெயில் (இந்தியா) லிமிடெட் உருவாக்கியுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை இத்திட்டம் இணைக்கிறது. கொச்சியில் உள்ள திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) மறுசீரமைப்பு முனையத்திலிருந்து, மங்களூரு வரை குழாய் வழியே எடுத்து செல்கிறது.

தொடக்க விழாவில் கர்நாடகா மற்றும் கேரளாவின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பங்கேற்றனர். ஒரே நாடு, ஒரே எரிவாயு கட்டமைப்பு திட்டத்தின் அடிப்படையில் ரூ.3,000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டம் குழாய் வழியாக மாவட்டங்கள் முழுவதும் வணிக மற்றும் தொழில்துறை பிரிவுகளுக்கு இயற்கை எரிவாயுவை வழங்கும். தூய்மையான எரிபொருளை உட்கொள்வது காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் காற்றின் தரத்தை மேம்படுத்த உதவும் என கூறப்படுகிறது.