ஹோட்டல் ஊழியர் அறையில் திடீரென புகுந்த சிறுத்தையால் பரபரப்பு.!

ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டல் ஊழியர் ஒருவரின் அறைக்குள் திடீரென சிறுத்தை புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அறைக்குள் சிறுத்தை இருப்பதை கண்ட அந்த

Leopard

ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டல் ஊழியர் ஒருவரின் அறைக்குள் திடீரென சிறுத்தை புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அறைக்குள் சிறுத்தை இருப்பதை கண்ட அந்த ஹோட்டல் ஊழியர், சாதுரியமாக கதவை மூடி வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார்

ஹோட்டல் நிர்வாகத்திடம் இருந்து தகவல் கிடைத்ததும், வனத்துறை மற்றும் ஜெய்ப்பூர் மிருகக்காட்சிசாலையின் குழுவினர் உடனடியாக அந்த இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி சிறுத்தையை வெற்றிகரமாக பிடித்து அதற்கு முதலுதவி அளித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டுள்ளனர்.

அரசு பங்களாவை காலி செய்தார் மஹுவா மொய்த்ரா!

தற்பொழுது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சிறுத்தை உள்ளே நுழைந்த போது, அந்த அறையில் யாரும் இல்லை என்றும், சிறுத்தையின் தாக்குதல்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

unknown node