சூப்பர்..இந்தியாவில் இன்றும் 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு.!

Less than 20,000 daily corona infections in India today; Total of 3,29,86,180 people healed ..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,870 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 378 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,37,16,451 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18,870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 100 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,37,16,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 378 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,47,751 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 28,178 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,29,86,180 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,82,520 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 87,66,63,490 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 54,13,332 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.