உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் வண்ணங்கள் பொழியட்டும்; பிரதமர் மோடி ஹோலி வாழ்த்து.!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஹோலி பண்டிகை இன்று வடமாநில மக்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டரில், மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் வண்ணங்கள் எப்போதும் உங்கள் வாழ்வில் பொழியட்டும். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துக்கள்! என பதிவிட்டுள்ளார்.

ஹோலி பண்டிகை, ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை தூவி மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்திய துணைக் கண்டத்தில் குளிர்காலத்திற்குப் பிறகு வசந்த காலத்தின் தொடக்கத்தை இந்த பண்டிகை குறிக்கிறது. இந்த திருவிழா தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது மற்றும் இரண்டு நாட்களில் கொண்டாடப்படுகிறது.